Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் மழை தொடர வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும் மழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை

வெப்பச்சலனத்தின் காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவமழை கடந்துசென்ற போதிலும், தமிழகத்தில் இன்னும் 24 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழை குறைந்து காணப்பட்டாலும், தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. 

நேற்று மாலை, தமிழகமெங்கிலும் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக, நீலகிரியில் 5 செ.மீ. மழையும் குறைந்தபட்சமாக விழுப்புரத்தில் 1 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. வெப்பச் சலனத்தின் காரணமாகவே தமிழகத்தில் மழை தொடர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, இன்று மாலை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close