Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரன் திடீர் மும்பை பயணம்

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில், டெல்லி போலீஸாரால் அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திவந்த தினகரன், திடீரென இன்று காலை விமானம்மூலம் மும்பை சென்றுள்ளார். இந்தப் பயணம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

dinakaran

இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் கூறுகையில், இன்று காலை தினகரனுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், அவர் பேசிக் கொண்டிருந்தார். உடனடியாக அவர் சென்னை விமான நிலையத்துக்குச் சென்றார். காலை 7 மணியளவில் மும்பை செல்லும் விமானத்தில் அவர் புறப்பட்டார்’ என்றனர். மும்பையில் முக்கிய விஐபி ஒருவரை தினகரன் சந்திப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close