Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீவிரவாதிகளுக்குப் பணம் கொடுத்த சென்னைப் பிரமுகர்கள்!

ராஜஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு சிறப்பு போலீஸாருக்கு ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர்கள் சென்னைக்கு வந்தனர். சென்னை வால்டாக்ஸ் சாலையைச் சேர்ந்த ஆரூண் மற்றும் அவரது கூட்டாளியை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இன்று, அவர்களை போலீஸார் டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச்சென்றனர். 

chennai airport

இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸார் கூறுகையில், 'பயங்கரவாத அமைப்புகளுக்குப் பணப்பரிமாற்றம் செய்வது தொடர்பாக, எங்களுக்கு முக்கியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் பேரில் சென்னையில் உள்ள ஆரூண் மற்றும் அவரது கூட்டாளியைப் பிடித்துள்ளோம். அவர்கள், தீவிரவாத அமைப்புகளுக்குப் பணப்பரிமாற்றம் செய்ததாக எங்களது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவர்களிடம் விசாரணை நடத்த டெல்லிக்கு அழைத்துச்செல்கிறோம். இந்த பணப்பரிமாற்றத்தில் ,இன்னும் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் நடவடிக்கைகளை ரகசியமாகக் கண்காணித்துவருகிறோம்’ என்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close