Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'வாத்தியார் எங்க ஊருக்கு வரவே பயப்படுறாங்க'- தண்ணீருக்காக ஏங்கும் அல்லிகுளம் கிராம மக்கள்

   


சிவகங்கை மாவட்டம். காளையார்கோவில் அருகேயுள்ள மேலமருதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அல்லிகுளம், கண்ணாகுளம், விளங்குளம் ஆகிய மூன்று கிராமம் தண்ணீர் இன்றி தாகத்தில் வறண்டுபோய் இருக்கிறது. ஆடு மாடுகூட உயிர்வாழ தகுதியில்லாமல் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. எங்களைக் காப்பாற்றுங்கள் என்று அல்லிகுளத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள்  வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடித்திருக்கிறார்கள்.


அல்லிவயல் கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் பேசும்போது, “எங்க கிராமம் 1990-ல் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்தது. இப்பதான் சிவகங்கை மாவட்டத்துல சேர்த்துருக்காங்க. முந்நூறு குடும்பம் இருக்கோம். எங்க ஊர் தண்ணியும் கடல் தண்ணியும் ஒண்ணு. குடிக்க முடியாது .அதுனால எங்க முன்னால் பிரசிடென்ட் நேமத்துல இருந்து தண்ணி கொண்டுவந்தாங்க. இப்ப அந்த மோட்டாரும் ரிப்பேர் ஆகிப்போச்சு. தண்ணி எடுக்க 4 கி.மீ நடந்து ஏரிவயல் அஞ்சாம்பட்டி ஊர்ல போய்  தண்ணி எடுத்து தலையில சுமந்து வர்றோம். எல்லா பஞ்சாயத்துலயும் குளிக்கத் தொட்டி கட்டிகொடுத்துருக்காங்க.எங்களுக்கு இல்ல. காரணம் நாங்க தலித்துங்கிறதுனால ஒதுக்குறாங்களானு தெரியல. ஆடு மாடு தண்ணி இல்லாம சாகுது. எங்க ஊர் ஊரணியில இருக்குற தண்ணிய நீங்களே பாருங்க சேறும் சகதியுமாக இருக்கிற இந்தத் தண்ணியத்தான் நாங்க தேத்தான்கொட்டை போட்டு பில்டர் பண்ணுறோம். அந்தத் தண்ணிய கலெக்டரம்மாகிட்ட காட்டிட்டு போகத்தான் வந்தோம்’’ என்றார்.


இதே கிராமத்தைச் சேர்ந்த பூரணம், “வெளியூர்ல போய்த் தண்ணி எடுக்குறோம். அவுங்களும் அசலூர்ல இருந்து தண்ணி எடுக்க வராதீங்கனு சத்தம் போடுறாங்க. ஆடு மாடுகூட இந்தத் தண்ணிய குடிக்காது. அதுக்காகச் சோறுகாய்ச்சுன வடிதண்ணியோட கலந்து வைக்கிறோம். அப்பவும் குடிக்கல. பள்ளிக்கூடத்து வாத்தியார் எங்க ஊருக்கு வரவே பயப்படுறாங்க. தண்ணியில்லாத ஊருக்கு பள்ளிக்கூடம் தேவையானு கேட்குறாங்க. சாயந்திரம் ஆயிட்டா ஊர் பொம்பளைங்க எல்லாம் முளைப்பாரி எடுக்கப் போறது மாதிரி குடத்தைத் தூக்கிட்டுப் போறதும் வருறதும்தான் வேலை. குடிக்கிறதுக்கு ஒரு குடம் பத்துரூபாய்க்குத் தண்ணி வாங்கிட்டு இருந்தோம் அந்த வண்டியையும் வரவிடாம தடுக்குறாங்க அதிகாரிகள். நாங்க குடிக்கிற தண்ணி இதுதான் (பாட்டிலைக் காட்டுகிறார் சேறும் சகதியுமான தண்ணியோடு) அதிகாரிகள் குடிப்பாங்களா. நாங்க விதியேனு சாகவேண்டி இருக்கு. அரசியல்வாதிகள் ஓட்டு வாங்க வரும் போது அப்படி இப்படினு படம் காட்டுறாங்க. படம் முடிஞ்சவுடன் நாங்க பாடாப்படுறோம். என்னைக்குதான் விடிவுகாலம் பொறக்கப்போகுதோ…’’னு கலங்கிய தண்ணியாய் கலங்கி நின்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close