Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டப்பேரவையில் சசிகலா, தினகரனுக்கு பாராட்டு மழை!

தமிழக சட்டசபையில் நடந்த இன்றைய கூட்டத்தில் சசிகலா, தினகரன் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார் எம்எல்ஏ. தங்கத்தமிழ்ச்செல்வன்.

சசிகலா, தினகரன்

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. சபாநாயகர் தனபாலுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார். சட்டப்பேரவையில் இன்று, சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வந்தது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கார் பதிலளித்தார். இதற்கு அடுத்ததாக அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ. தங்கத் தமிழ்ச்செல்வன் பேசினார்.

எம்எல்ஏ. தங்கத் தமிழ்ச்செல்வன் பேசுகையில், சசிகலா மற்றும் தினகரனை அதிகப்படியாகவே புகழ்ந்து பேசினார். குறிப்பாக கூவத்தூர் ஒற்றுமையால் மட்டுமே தமிழகத்தில் இதுவரை ஆட்சி நீடிப்பதாகக் கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close