Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடியின் ஜிஎஸ்டி மீது ஜி.ராமகிருஷ்ணன் கடுமையான விமர்சனம்!

'கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்துக்காகவே ஜிஎஸ்டியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது' என்று விமர்சன் செய்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

ஜி. ராமகிருஷ்ணன்

ஜூலை 1 முதல் 'ஒரே  நாடு ஒரே வரி' என்ற சரக்கு மற்றும் சேவை வரி மசோதா அமலுக்கு வந்தது. ''இந்தியாவின் புதிய எதிர்காலம் தொடங்கியுள்ளது. பகவத் கீதையின் 18 அத்தியாயங்களைப்போல, 18 முறை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று இப்போது ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது” என்று உற்சாகத்தோடு உரையாற்றினார் பிரதமர் மோடி. இதனிடையே, ஜிஎஸ்டி மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. மேலும், ஜிஎஸ்டி-யின் நன்மை தீமைகள் குறித்து பொருளாதார நிபுணர்கள் பல்வேறு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஜிஎஸ்டி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். 'மத்திய அரசின் வரி விதிப்பால் உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் உணவகங்களில் சாப்பிடுகிற 2 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்ட நிலையில், கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமாக அவசர அவசரமாக பா.ஜ.க அரசு ஜிஎஸ்டியைக் கொண்டுவந்துள்ளது' என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close