Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பல்லடத்தில் கடையடைப்பு.. கறுப்புக் கொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பு..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதியில் நீண்டநாள்களாகக் கிடப்பில் போடப்பட்டுக் கிடக்கும் பல முக்கிய கோரிக்கைகளை விரைவில் தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்லடம் பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று ஒருநாள் முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.

வணிகர்கள் தங்களின் கடைகளுக்கு முன்பு கறுப்புக்கொடி ஏற்றி, தொகுதி மக்களின் கோரிக்கைகளைத் துண்டறிக்கைகளாகக் கதவுகளில் ஒட்டி வைத்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பல்லடம் வட்டார அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் அமைப்புகள் எனப் பல்வேறு தரப்பினரும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு அளித்ததால் 2,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

பல்லடம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், தேர்தலின்போது இந்தத் தொகுதிக்கு அரசுக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்துவிட்டு செல்கின்றனர். ஆனால், வெற்றி பெற்றவுடன் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. பல்லடம் தாலுகாவில் மட்டும் ஆண்டுதோறும் ப்ளஸ் டூ முடித்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்துக்கும் மேல் இருக்கிறது.


பல்லடம் பகுதி மாணவர்கள் பெரும்பாலும் திருப்பூர் அல்லது கோவைக்குச் சென்றுதான் கல்லூரி  படிப்பை பயில வேண்டிய நிலைமை பல வருடங்களாக நீடித்து வருகிறது. எனவே, உடனடியாக இந்தப் பகுதியில் அரசுக் கல்லூரியை அமைக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும். மேலும், பல்லடத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க வேண்டும், சார்பு நீதிமன்ற கட்டடம் கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அவற்றுள் இடம்பெற்றிருக்கின்றன. பல்லடம் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்டப் போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்கின்றனர் பல்லடம் தொகுதி மக்கள்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close