Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ஆண்களுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சையில் சலுகையா?” - சட்டசபையில் பொங்கிய பெண் எம்.எல்.ஏ!

சட்டசபை

மிழக சட்டமன்றத்தில் நடைபெற்றுவரும் மானியக் கோரிக்கையில்  இன்று மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறையின் மானியக் கோரிக்கை நடைபெற்றது. 

சுகாதாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை தி.மு.க சார்பில் பூங்கோதை ஆலடி அருணா தொடங்கிவைத்தார். பூங்கோதை பேசுவதற்கு எழுந்தபோது, தனது கட்டை விரலை உயர்த்தி நான் இந்த விவாதத்தில் வெற்றி பெறுவேன் என்று சொல்வதைப் போல விஜயபாஸ்கரைப் பார்த்து சைகை செய்தார். விஜயபாஸ்கரும் பதிலுக்கு கட்டைவிரலை உயர்த்திக் காண்பித்தார்.  எனவே, பூங்கோதை பேச்சில் தொடர்ந்து குறிக்கீடு செய்து பதில் அளித்துக்கொண்டே இருந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஒரு கட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்டம் தி.மு.க-வினரால் கொண்டுவரப்பட்டது என பூங்கோதை பேசியதற்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அ.தி.மு.க ஆட்சியிலே ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டுவரப்பட்டது என வாக்குவாதம் செய்ய சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. 

பூங்கோதைதொடர்ந்து பூங்கோதை பேசும்போது, “தமிழகத்தில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் கருத்தடைக்கான அரசு உதவித்தொகையை அதிகரித்து தரவேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார். “தமிழகத்தில் கருத்தடை பயன்பாட்டில் பெண்கள்தான் அதிக அளவில் கருத்தடை அறுவைசிகிச்சை செய்துகொள்கிறார்கள். ஆண்களில் 91 சதவிகிதம் பேர் ஆணுறையைப் பயன்படுத்திக்கொள்வதால், ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்துகொள்வது குறைவாக உள்ளது. அதேபோல கருத்தடை செய்துகொள்ளும் ஆண்களுக்கு உதவித் தொகையாக 1,200 ரூபாய் கொடுக்கப்படுகிறது. ஆனால், பெண்களுக்கு 250 ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதில் ஏன் இந்த பாரபட்சம்? ஆண்களே குறைவாகத்தான் கருத்தடை அறுவைசிகிச்சை செய்கிறார்கள். அவர்களுக்குக் கூடுதல் தொகை வழங்கும் அரசு, அதிக அளவில் கருத்தடை செய்யும் பெண்களுக்கு ஏன் வழங்கவில்லை. ஆண்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சை குறித்து விழிப்புஉணர்வையும் அதிகரிக்க வேண்டும். கருத்தடை செய்வதில் ஆண், பெண் என்ற பாரபட்சம் ஏன் பார்க்க வேண்டும்?” என்று கோரிக்கை வைக்க சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close