Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சூரத்தில் பெண்களுக்கான பிரத்யேக பிங்க் ஆட்டோ அறிமுகம்

பிங்க் ஆட்டோ

குஜராத் சூரத் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பெண்களுக்கான பிரத்யேக ‘பிங்க்’ நிற ஆட்டோ சர்வீஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசு நிர்வாகம் சார்பாக முதல்கட்டமாக ஆட்டோ பயிற்சி பெற்ற 75 பெண்களுக்கு 25 சதவீத மானியத்தில் வங்கிக்கடன் வழங்கப்பட்டது. பெண்களுக்காக செயல்படும் ஆட்டோ சர்வீஸ் என்பதைக் குறிக்கும் வகையில் ஆட்டோக்கள் பிங்க் நிறத்தில் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது. பிங்க் நிற ஆட்டோ சர்வீஸை முதலமைச்சர் விஜய் ருபானி தொடங்கி வைத்தார்.

முதல்கட்டமாக 15 பெண்கள் தங்கள் பணியைத் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து விரைவில் மற்ற பெண்களும் பணியைத் தொடங்க உள்ளனர். பெண்கள் ஸ்பெஷலாக நகரில் வலம் வரும் இந்த ஆட்டோக்களின் பெண் ஓட்டுநர்கள் பள்ளிகள், கல்லூரிகள், பெண் பயணிகள் என சேவை செய்து வருகின்றனர். இதன் மூலம் மாதம் ரூ.18 ஆயிரம் சம்பாதிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close