Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜி.எஸ்.டி பாதிப்பு; சமையல் எரிவாயு விலை 32 ரூபாய் அதிகரிப்பு..!

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டதன் காரணமாக மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுவின் விலை 32 ரூபாய் அதிகரித்துள்ளது. 


பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டரின் விலை 32 அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிறுவனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் சிலிண்டருக்கு விற்பனை வரி, உற்பத்தி வரி, கலால் வரி ஆகியவை விதிக்கப்பட்டு வந்தது.

இந்த மூன்று வரிகளும் ஐந்து சதவீதத்துக்கு குறைவாகவே இருந்தது. தற்போது ஜி.எஸ்.டியின் காரணமாக, 446 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் 32 ரூபாய் அதிகரித்து 477-ஆக அறிவித்துள்ளது. தமிழகத்தில் சிலிண்டர் விலை 465 ரூபாய் இருக்கும் என்று தெரிகிறது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close