Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோவை மார்க்சிஸ்ட் ஆபீஸில் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது!

கோயம்புத்தூர் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடந்த ஜூன் 17-ம் தேதி, சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதுகுறித்து, அக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த தாக்குதலில், அலுவலகத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார், இருசக்கர வாகனம் சேதமடைந்தது. பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. இதுசம்பந்தமாக மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close