Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழக அரசுக்கு டிவிட்டரில் வேண்டுகோள் வைத்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்கள் கிழமை முதல் காலவரையற்ற காட்சி நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன தமிழகத் திரை அரங்குகள். தமிழ்த் திரையுலகம் இந்தக் கேளிக்கை வரிக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இது குறித்து தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்ற வேண்டுகோளைத்  திரை நட்சத்திரங்கள் வலியுறுத்தி வந்தனர். நேற்றைய தினம் இயக்குநர் சேரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டிவிட்டரில் வேண்டுகோள் வைத்தார். அதில் " ரஜினி சார், தயவு செய்து ஜி.எஸ்.டி வரி விதிப்பு மற்றும் தமிழக அரசின் வரிக்கு எதிராகக் குரல் கொடுங்கள். உங்களது மதிப்புமிகுந்த குரலால் தமிழ் சினிமாவைக் காப்பாற்ற முயற்சி எடுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

ரஜினி வேண்டுகோள்

இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் ரஜினி,  இன்று அதிகாலையில் டிவிட்டரில் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார். தமிழ்த் திரையுலகில் பணிபுரியும் லட்சக்கணக்கானவர்கள் நலனைக் கவனத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க கேளிக்கை வரி விவகாரத்தில் திரைத்துறையினரின் கோரிக்கையைப் பரிசீலிக்கவும் எனத் தமிழக அரசிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close