Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பருவமழை கடந்தாலும் வெப்பச்சலனத்தால் இன்றும் தமிழகத்துக்கு மழை!

வெப்பச்சலனத்தின் காரணமாக இன்றும் தமிழகத்தில் மழை தொடர வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

தமிழகத்தின் பல இடங்களில் வெப்பச்சலனத்தின் காரணமாக மழை தொடர்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அருகே உள்ள மாவட்டங்களில், பருவமழை தற்போது தொடர்ச்சியாகப் பெய்து வருகிறது. வெப்பச்சலனத்தின் காரணமாகவே தமிழகத்தில் இன்னும் 24 மணி நேரத்துக்கு மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழை குறைந்து காணப்பட்டாலும், தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

நேற்று கடலூர், கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக கடலூரில் 6 செ.மீ. மழையும், குறைந்தபட்சமாக கோவை மாவட்டத்தின் சில பகுதிகளில் 3 செ.மீ. மழையும் பெய்தது. சென்னையைப் பொறுத்தவரை, பகலில் வெயில் அதிக அளவில் இருந்தாலும் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படும். நேற்று, சென்னையில் அதிகபட்சமாக 100 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close