Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமையல் எரிவாயு மீதான ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும்! வைகோ கோரிக்கை

சமையல் எரிவாயு மீதான ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

வைகோ

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி-யில் மானிய விலையில் வழங்கப்படும் சமையல் எரிவாயுவுக்கு 5 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை சிலிண்டருக்கு விற்பனை வரி, உற்பத்தி வரி, கலால் வரி ஆகியவை விதிக்கப்பட்டு வந்தது. இந்த மூன்று வரிகளும் ஐந்து சதவிகிதத்துக்கும் குறைவாகவே இருந்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி-யின் காரணமாக, 560 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் 32 ரூபாய் அதிகரித்து 592 ரூபாயாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரிவிதிப்புமுறை குறித்து வைகோ கூறுகையில், ‘மாநிலங்களின் உரிமைகளை நசுக்கும் வகையில் ஜிஎஸ்டி கவுன்சிலில் மத்திய அரசின் கையே ஓங்கி இருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில், மாநில அரசுகள் முன்மொழிந்த பல்வேறு பொருள்களுக்கான வரி விகிதங்களை மத்திய அரசு கவனத்தில்கொள்ளவில்லை. ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்புகள்குறித்து மாநில அரசுகளுடன் விரிவான கலந்தாய்வு செய்யவும் மத்திய அரசு தயாராக இல்லை என்பது கண்டனத்துக்குரியது. கோடிக்கணக்கான மக்களை நேரடியாகப் பாதிக்கும் வகையில் சமையல் எரிவாயு உருளைக்கு விதிக்கப்பட்டுள்ள 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close