Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சட்டப்பேரவையில் 3 அமைச்சர்களின் இன்றைய அறிவிப்பு!

காமராஜர் வாழ்க்கை வரலாற்றைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கொடைக்கானல் ஊராட்சியில் உள்ள பரப்பலாறு அணையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ராதாபுரம் எம்.எல்.ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், காமராஜர் வாழ்க்கை வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என்றார். திமுக உறுப்பினர் சேகர் பாபு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செங்கோட்டையன், ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு வகுப்புகளுக்கான பயிற்சி வகுப்புகள் 32 மாவட்டங்களில் விரைவில் தொடங்கப்படும் என்றும், உள்ளாட்சித்துறை மூலம் வசூலிக்கப்படும் வரியை 10 சதவிகிதம் நூலகத்துக்கு ஒதுக்கீடு செய்வது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார்.

சோளிங்கர் எம்எல்ஏ பார்த்திபன் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், சோளிங்கரில் சார்பு நீதிமன்றம் அமைக்க உயர் நீதிமன்றம் அரசுக்கு பரிந்துரைத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சோளிங்கரில் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கையை பொறுத்து நீதிமன்றம் அமைக்க பரிசீலனை செய்யப்படும் என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், சீர்மிகு சட்டப்படிப்புக்காக 780 இடங்களுக்கு 2,515 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும். அம்பேத்கர் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து ஒரு மாதத்தில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close