Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''விளக்கு எங்கே எரிந்தாலும் வெளிச்சம் தரும்!''- யோகிக்கு ஸ்ரேஷ்தா 'நச்' பதில்

த்தரப்பிரதேச மாநிலம் புலாந்த்சகர் மாவட்டத்தில், பி.ஜே.பி தொண்டர்களைக் கைதுசெய்து, ஒரே நாளில் லைம் லைட்டுக்கு வந்தவர், டிஎஸ்பி ஸ்ரேஷ்தா தாகூர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் போடாமல் வந்த லோக்கல் பி.ஜே.பி தலைவர்களை ஸ்ரேஷ்தா கைதுசெய்ய, அவர்கள் நிலைகுலைந்துபோனார்கள்

உத்தரபிரதேச போலீஸ் அதிகாரி ஸ்ரேஷ்தா

உடனடியாக,11 எம்எல்ஏ-க்கள் மற்றும் ஒரு எம்பி ஒன்றுதிரண்டு, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் ஸ்ரேஷ்தா பற்றி புகார்  கூறினர். மக்கள் முன்னிலையில் 'தங்கள் மானம் போய்விட்டது' என்று அவரிடம் புலம்பித்தள்ளியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, நேபாள எல்லையில் உள்ள பைரச் பகுதிக்கு ஸ்ரேஷ்தா இடமாற்றம்செய்யப்பட்டார். நாளை, அங்கு சென்று  பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, ஸ்ரேஷ்தா  தன் ஃபேஸ்புக் பக்கத்தில், 'விளக்கு எங்கே எரிந்தாலும் வெளிச்சம் தரும். அதற்கென்று நிலையான இடம் கிடையாது' எனப் பதிவிட்டுள்ளார். ஸ்ரேஷ்தாவைப் பின் தொடர்பவர்கள், அந்தப் பதிவை இணையத்தில் பரப்பி வருகின்றனர். ஸ்ரேஷ்தாவின் ஆதரவாளர்களால் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் பக்கத்தில், இதுவரை 2 ஆயிரம் பேர் இணைந்திருக்கின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மிகவும் பின்தங்கியது, பைரச் பகுதி. வன்முறைக்கும் பஞ்சம் இல்லாதது. ஆளுங்கட்சியினரையே விரட்டி அடித்ததால், இப்போதே பைரச் பகுதியில் ஸ்ரேஷ்தா பாப்புலர் ஆகியுள்ளார். அவரின் வரவை எதிர்பார்த்து பைரச் பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close