Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’தமிழ்நாடுதான் டாப்’: சான்றளிக்கும் ரிசர்வ் வங்கி!

நாட்டிலேயே அதிகப்படியான தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளதென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

இந்தியாவின் தொழிற்சாலைகள், தொழிற்வளர்ச்சிகள் குறித்து ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஓர் ஆய்வு முடிவை வெளியிட்டது. 2016-17 ஆண்டில் எடுக்கப்பட்ட சர்வேயின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இம்முடிவுகளின் அடிப்படையில் நாட்டிலேயே அதிகளவிலான தொழிற்சாலைகள் நிறைந்த மாநிலமாகத் ‘தமிழ்நாடு’ உள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், அதிகளவில் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடம் வகித்தாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாடு குஜராத் மாநிலத்தில்தான் அதிகளவில் உள்ளது என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாநிலத்தில்தான் தொழிற்சாலைகள் மூலம் முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் அதிகளவில் உள்ளது என்றும் குஜராத்துக்கு பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையில் குஜராத் மூன்றாமிடத்திலேயே உள்ளது. இந்தியாவிலுள்ள மொத்த தொழிற்சாலைகளில் 16% தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close