Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருமணமான 30 நாளில் திருமணப் பதிவு கட்டாயம்!

திருமணமான 30 நாள்களுக்குள் திருமணத்தைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் எனச் சட்டம் இயற்ற மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இன்று திருமண உறவு பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. கிராமப்புறங்களில் குழந்தைத் திருமணங்கள் நடந்து வருவதாகப் புகார்கள் எழுகின்றன. திருமணப் பதிவுச் சட்டத்தைக் கட்டாயப்படுத்துவதால், குறிப்பிட்ட வயதை எட்டாமல் திருமணம் நடத்துவதைத் தவிர்க்க முடியும். 

திருமணம்

 

திருமணம் நடந்த 30 நாள்களுக்குள் பதிவு கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்குள் பதிவு செய்யாததற்கு உரிய காரணம் இல்லாத நிலையில் தாமதிக்கப்படும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்றும் சட்ட ஆணையம் வலியுறுத்தியுள்ளது. திருமணத்தைப் பதிவு செய்யாத தம்பதிகளுக்கு, திருமணச் சான்றிதழ் மூலம் கிடைக்கும் சலுகைகள் எதுவும் வழங்கப்படக்கூடாது என்பதையும் சட்ட ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இனி பிறப்பு இறப்பைப் பதிவு செய்வது போல திருமணமும் பதிவு செய்யப்பட வேண்டும்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close