Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மேடை ஏறுகிறார்... கட்சி கரைவேட்டி கட்டுகிறார்! தட தட திவாகரன்... மள மள மன்னார்குடி

திவாகரன்

ட்சியிலும், ஆட்சியிலும் தன்னுடைய ஆதரவாளர்களுக்கு மாவட்டச் செயலாளர், அமைச்சர் பதவிகளை சசிகலா சிபாரிசின்பேரில் வாங்கிக்கொடுத்து அழகுபார்த்தவர் சசிகலாவின் தம்பி திவாகரன். அ.தி.மு.க-வில் பதவியில் இல்லாவிட்டாலும் அதிகாரிகளை தன் கண் அசைவில் ஆட்டிப்படைத்தவர். தற்போது, அவர் நேரடி அரசியலில் குதிக்கப்போவதாகத் தெரிவிக்கிறார்கள் டெல்டா மாவட்ட அ.தி.மு.க-வினர்.

திவாகரன் நேரடி அரசியலுக்கு வரவிருப்பதாகக் கிடைத்தத் தகவல் குறித்து மன்னார்குடி வட்டாரத்தில் விசாரித்தோம். “அ.தி.மு.க இப்போது பல்வேறு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. சசிகலாவின் வகையறாக்களை கங்கணம் கட்டிக்கொண்டு வருகிறார்கள் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நிர்வாகிகள். ஓ.பி.எஸ், எடப்பாடி பழனிசாமி, டி.ஜெயக்குமார், டி.டி.வி. தினகரன் என ஒவ்வொருவரும் தனித்தனியாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் செயல்பட்டு வருகிறார்கள். திவாகரனுக்கு ஆதரவாளர்கள் இருந்தாலும், வெளிப்படையாக அவர் அரசியலில் குதித்தால்தான் நன்றாக இருக்கும். ஆனால், திவாகரன் ஒருபோதும் நேரடி அரசியலுக்கு வர விரும்பியதில்லை. கடந்த சில மாதங்களாக அ.தி.மு.க-வின் நிலையை நினைத்துப்பார்த்தால், எங்கே அப்படியொரு கட்சி இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம்தான் ஏற்படுகிறது. 'இனிமேலும் அமைதியாக இருந்தால் நன்றாக இருக்காது' என்றுதான், மன்னார்குடியில் திவாகரன் தலைமையில் ஜூலை 15-ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டுவிழாவைக் கொண்டாட இருக்கிறோம்" என்று சொல்லி பூரித்துப்போனார்கள் திவாகரன் ஆதரவாளர்கள். 

மேலும் "தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அ.தி.மு.க-வினர் கொண்டாடி வருகிறார்கள். மன்னார்குடியில் பாஸ் தலைமையில் கூட்டத்தை நடத்தவேண்டுமென வற்புறுத்தினோம், திவாரகனிடம் அனுமதி பெற்றபிறகே இப்போது மிகப்பிரமாண்டமாக மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்" என்றனர்.

திவாகரன் பேனர்

இன்னும் சிலரோ, முதன்முதலில் அ.தி.மு.க வண்ணத்தில் திவாகரன் பெயர் அச்சிடப்பட்டு, நோட்டீஸ் மற்றும் பிளக்ஸ் ரெடி செய்து வருகிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். மன்னார்குடி முழுக்க பிளக்ஸ்கள் மற்றும் தோரணங்கள் கட்டவும் திட்டமிட்டு வருகிறார்கள். 'திவாகரன் என்ன பேசவேண்டும்' என்பதை ஒருபிரிவினர் தயார் செய்துவருகிறார்கள். சிறப்பு அழைப்பாளராக, எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பண்ருட்டி ராமச்சந்திரனை அழைக்க ஏற்பாடு செய்துவருகிறார்கள். தவிர, திவாகரன் ஆதரவு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்துகொள்ளவும் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கடந்த ஜூன் 11-ம் தேதி தினகரன் தலைமையேற்க வேண்டுமென்று, நாஞ்சில் சம்பத் தலைமையில் கூட்டத்தை நடத்தவிடாமல் திவாகரன் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தனர். அதையடுத்து திவாகரன் தலைமையேற்க வேண்டுமென்பதற்காகத்தான், வரும் 15-ம் தேதி பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மன்னார்குடியில் முதன்முதலில் மேடையில் திவாகரன் பேச இருக்கிறார். தமிழகம் முழுக்க தன்னுடைய ஆதரவாளர்களை ஒன்றுதிரட்டி தனக்கு கட்சியில் இருக்கும் பலத்தை நிரூபிக்க போட்ட மாஸ்டர் பிளான்தான் இக்கூட்டம்" என்கிறார்கள் கட்சியில் விவரம் அறிந்தவர்கள்.

இதை முன்மொழியும்விதமாக, கடந்த 28-ம் தேதி முன்னாள் எம்எல்ஏ பாப்பா சுப்பிரமணியன் மகன் திருமணத்தை நடத்திவைக்க, திருவாரூர் சென்ற திவாகரனை வரவேற்று, "தம்பி வா...தலைமை ஏற்க வா..." என்ற பிளக்ஸ் வைத்து பிரமிக்க வைத்தனர். திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய திவாகரன், "தொண்டர்களாகிய நீங்கள் இருக்கும்வரை அ.தி.மு.க-வை யாராலும் அழிக்க முடியாது" என்று உற்சாகப்படுத்திப் பேசினார். 

ஆக...அ.தி.மு.க-வில் திவாகரன் அணி உருவாகப்போவது உறுதியாகி உள்ளது...!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close