Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கு இது நிச்சயம்! எச்சரிக்கும் சுப்பிரமணியன் சுவாமி

'ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து' என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில், தனது மருமகனின் நண்பர் வீட்டுத் திருமண விழாவில் கலந்துகொள்ள, பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று தூத்துக்குடி வந்தார். முன்னதாக, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’அ.தி.மு.க. எத்தனை அணிகளாகவும் பிரிந்திருக்கலாம். ஆனால், சசிகலா அணிதான் உண்மையான அ.தி.மு.க. அடுத்த சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ.க-தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும். ரஜினி அரசியலுக்கு விரைவில் வருகிறார், வரப்போகிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள். அப்படி அவர் அரசியலுக்கு வந்தால், அது அவருக்குத்தான் ஆபத்து. அவரை பா.ஜ.க.வுக்கு வருமாறு யாரும் வற்புறுத்தவில்லை. ரஜினி பா.ஜ.க.வில் இணையப் போகிறார் எனச் சொல்லப்பட்டு வரும் கருத்தில் உண்மையில்லை.

தமிழகத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் தமிழகத்தில் மட்டும்தான் புலியாக இருக்கிறார்கள். ஆனால், டெல்லியில் அவர்கள் பூனைக்குட்டிதான். வரும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பாளர் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருக்கு 67 சதவீத ஆதரவு இருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலித் கோஷம் எதுவும் எடுபடாது. ஏனென்றால் அந்தக் கட்சியிலுள்ள தலித் தலைவர்களே எங்களுக்குத்தான் ஆதரவு அளித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தலுக்குப்பின் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அ.தி.மு.க.வின் ஆட்சி கலைக்கப்பட்டுவிடும் என்பதிலும் உண்மை இல்லை’’ எனப் பேசி முடித்துவிட்டு, ஆழ்வார்திருநகரியில் நடக்கும் திருமண விழாவுக்கு விரைந்தார். திருமணவிழாவுக்கு வந்த சுப்பிரமணிய சுவாமியிடம், ''விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்கு நீதிமன்றம் தடைவிதித்தது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘’நான் என்ன விவசாயியா என்றார். அ.தி.மு.க நிலைப்பாடு குறித்த கேள்விக்கு, ’’நான் என்ன அ.தி.மு.க.காரனா’’ எனக் கோபமாகப் பதிலளித்துவிட்டுக் கிளம்பினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close