Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘செல்போன் கடை டு துபாய் பிசினஸ்’ - சென்னையில் கைதான ஐ.எஸ் உறுப்பினரின் திடுக் பின்னணி

ISIS

சென்னையில் கைதான ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர் என்று சொல்லப்படும் ஹாரூன் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹாரூன், சென்னையில் செல்போன் கடைவைத்துக்கொண்டு துபாய் வரை பிசினஸில் ஈடுபட்டுள்ளார். மயிலாப்பூரில் கைதான ஐ.எஸ். தீவிரவாத ஆதரவாளர் முகமது இக்பாலுடன் தொடர்பில் இருந்தாகவும் ராஜஸ்தான் போலீஸார் தெரிவித்தனர். 

ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் குறித்து தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீஸார் ரகசிய விசாரணை நடத்திவருகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு துபாயிலிருந்து தங்கக்கட்டிகளை கடத்திவந்த ஜமில் என்பவரை மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸார் பிடித்தனர். ஜமிலிடம் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியபோது அவர், ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்பது தெரியவந்தது. ஜமில் கொடுத்த தகவலின்படி சென்னை மயிலாப்பூருக்கு கடந்த பிப்ரவரி மாதம் ராஜஸ்தான் போலீஸார் வந்தனர். மயிலாப்பூரில் தங்கியிருந்த முகமது இக்பாலை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது சென்னையில் சிலரது மீது சந்தேகம் ஏற்பட்டது.

இந்தசமயத்தில் முகமது இக்பாலின் போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் சென்னையிலிருந்து ஒருவர் அடிக்கடி  ஹாரூன்தொடர்பு கொண்டது தெரிந்தது. அவர் யார் என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அவர், சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை நடத்தி வரும் ஹாரூன் என்பது தெரிந்தது. உடனடியாக ராஜஸ்தான் போலீஸார் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தனர். அவர்கள் ஹாரூனை மடக்கிப் பிடிக்க முடிவு செய்தனர். பர்மா பஜாரில் கைது செய்தால் பிரச்னை ஏற்படும் என்று கருதிய போலீஸார், ஹாரூனை பிடிக்க வியூகம் அமைத்தனர்.

இதுகுறித்து ராஜஸ்தான் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "சென்னை போலீஸார் கொடுத்த அறிவுரைப்படி ஹாரூனை பர்மா பஜாரில் கைது செய்யவில்லை. அவர் செல்போன் கடையிலிருந்து வீட்டுக்குச் செல்லும்வழியில் மடக்கிப் பிடிக்க முடிவு செய்தோம். இதற்காக முத்தியால்பேட்டை தபால்நிலையம் அருகே காத்திருந்தோம். நாங்கள் எதிர்பார்த்தப்படி ஹாரூன் அங்கு வந்தார். உடனே அவரைப் பிடித்து விசாரித்தோம். முதலில் அவர் எந்தத் தகவலையும் சொல்லவில்லை. முகமது இக்பால் யார் என்றே தெரியாது என்று கூறினார். இதன்பிறகு முகமது இக்பாலிடம் ஹாரூன் போனில் பேசிய ஆதாரத்தை காட்டியதும் அமைதியாகிவிட்டார். இதையடுத்து அவரை கைது செய்து ராஜஸ்தானுக்கு அழைத்துச் செல்ல முடிவுசெய்தோம்.

அப்போது, ஹாரூன் ஒரு வேண்டுகோளை எங்களுக்குவிடுத்தார். தனக்கு உதவி செய்ய அவரது தம்பியையும் டெல்லிக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நாங்களும் சம்மதம் தெரிவித்தோம். இதையடுத்து, இருவரையும் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளோம்.

ஹாரூன், சமீபத்தில் குறிப்பிட்ட தொகையை துபாய்க்கு அனுப்பியிருக்கிறார். மேலும், அவருடன் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் தொடர்பில் இருந்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன" என்றார். 

இதற்கிடையில் ஹாரூன், 'செல்போன் வாங்கவே துபாய்க்கு பணம் அனுப்பினேன். எனக்கும், தீவிரவாத அமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை' என்று கூறியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close