Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய கைலாஷ் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது!

மத்திய கைலாஷ் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது. சென்னை அடையாறு கஸ்தூரிபா நகரில் அமைந்திருக்கும்  இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் இன்று காலை 9.45 மணிக்கு நடைபெற்றது. எண்ணற்ற பக்தர்கள் கலந்துகொண்டு தரிசித்தனர்.

மத்தியகைலாஷ் கோயில்

1973-ல் இப்போது கோயில் அமைந்திருக்கும் இடத்தில் குழி தோண்டியபோது, விநாயகர் சிலை ஒன்று கிடைத்தது. அதே இடத்தில் ஒரு குடிசை அமைத்து விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.  பிறகு 1984-ல் இந்த இடத்தில் திருவேங்கடசாமி என்ற அன்பர் ஒரு கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார். அதற்கு முன்பாக காஞ்சி பரமாசார்ய சுவாமிகளை தரிசிக்கச் சென்றபோது, 'அந்த இடத்தில் பல சந்நிதிகள் உருவாகப் போகிறது. கவலைப்படாமல் போய் ஆகவேண்டிய வேலைகளை கவனி' என்று சொல்லி பிரசாதம் கொடுத்து அனுப்பினார். அதேபோல் இங்கு பல தெய்வ சந்நிதிகள் ஏற்பட்டன. கோயிலில் இருக்கும் 33 விக்கிரகங்களும் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரால் வழங்கப்பட்டது. பிறகு 1990-ல் ராஜகோபுரம் கட்டி கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பது குறிப்பிடத் தக்கது.   

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close