Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் மல்லையாவுக்கு எதிராக மேலும் ஒரு பிடிவாரண்ட்

விஜய் மல்லையா

யிரக்கணக்கான கோடி ரூபாய் பணமோசடிப் புகாரில் இருந்து தப்பிக்க பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவாக இருக்கிறார். இந்நிலையில், டெல்லியில் உள்ள பணமோசடி தடுப்புப் பிரிவுக்கான சிறப்பு நீதிமன்றம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மல்லையாவுக்கு எதிராக,  கிங் பிஷர் ஏர் லைன்ஸ் நிறுவனம் சார்பில் வாங்கப்பட்ட ஐ.டி.பி.ஐ வங்கி கடன் மோசடி தொடர்பான வழக்கில் முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மல்லையாவுக்கு எதிராகப் புகார் பதிவு செய்யப்பட்டது.

லண்டனில் இருக்கும் மல்லையா, அங்கிருக்கும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். அப்போது நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும் போது, "லட்சக்கணக்கான ரூபாய் இருப்பதுபோல நீங்கள் கனவு மட்டும்தான் காணமுடியும். ஆனால், அதற்கு ஆதாரம் ஒன்றும் இல்லை. உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா. ஆதாரம் இல்லாமல் எதையும் உங்களால் நிரூபிக்க முடியாது. என் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன். என் மீது தவறு இல்லை என்பதை நிரூபிப்பதற்காக என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.  

விஜய் மல்லையா மீது, இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர், தலைமறைவான குற்றவாளி என்று கடந்த ஏப்ரல் 18-ம் தேதி அறிவிக்கப்பட்டார். அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கும்படி மத்திய அரசு சார்பில் இங்கிலாந்து அரசிடம் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தன் மீது வழக்கு பாய உள்ளதை முன்கூட்டியே அறிந்துகொண்ட விஜய் மல்லையா கடந்த ஆண்டு மார்ச் 2-ம் தேதி நாட்டை விட்டு வெளியேறினார். அப்போதில் இருந்து அவர் லண்டனில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close