Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்போலோவிலிருந்து சபாநாயகர் தனபால் டிஸ்சார்ஜ்!

சபாநாயகர் தனபால் அப்போலோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். 

Dhanapal


தமிழக சட்டசபையில் சபாநாயகராக இருக்கும் தனபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல், மயக்கம் உள்ளிட்ட குறைபாடுகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தனபாலைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

இதைத்தொடர்ந்து, தனபாலின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை தெரிவித்தது. தனபால் அவைக்கு வராத்தால், நேற்றும் இன்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் அவைக் கூடியது. இந்நிலையில், உடல்நிலை சீரானதால் தனபால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். தற்போது வீடு திரும்பியுள்ள தனபால், நாளை சட்டசபை நிகழ்வில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close