Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஒப்படைப்பு: அதிரடி காட்டும் கதிராமங்கலம் மக்கள்

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 30-ம் தேதி ஓஎன்ஜிசி நிறுவனத்தால் புதைக்கப்பட்டிருந்த எண்ணெய்க்குழாய் வெடித்துச் சிதறியதால், கதிராமங்கலம் மக்கள் வாழ்க்கையே புரட்டிப்போட்டிருக்கிறது. 

போராட்டத்தில் குதித்த கிராம மக்களைத் தடியடி பிரயோகம் செய்து பெண்கள் மற்றும் ஆண்களைக் கலைத்த காவல்துறை, கதிராமங்கலத்தையே தங்களது பிடியில் வைத்திருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் வந்து, எங்களுக்கு உறுதிமொழி கொடுத்தால் நாங்கள் போராட்டத்தைக் கைவிட்டுவிடுவோம் என்று சொல்லுகிறார்கள் மக்கள். ஆனால், மாவட்ட ஆட்சியர்தான் கதிராமங்கலம் மக்களை சந்திக்காத பின்னணி என்னவென்று தெரியவில்லை. ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலத்தில் கடந்த 6 நாள்களாகக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் கடந்த 2 நாள்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிராமமக்கள் தினம் தினம் நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில்தான், போராட்டதின்போது கைதுசெய்யப்பட்ட மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. திருவிடைமருதூர் தாலுக்கா அலுவலகத்துக்கு பேச்சு வார்த்தைக்கு அழைத்த மாவட்ட ஆட்சியரை புறக்கணிப்பு செய்தனர். கைதுசெய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்தால்தான் பேச்சுவார்த்தை என்று நிபந்தனை விதித்தனர்.

மாவட்ட ஆட்சியர் எங்கள் கிராமத்துக்கு வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் பேசத் தயாராக இருக்கிறோம் என்று குரல் கொடுத்து வந்தனர். இன்று, போராட்டத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை ஜாமீன்கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், கதிராமங்கலம் மாரியம்மன் கோயிலில் பொதுமக்கள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர், பேச்சுவார்த்தை நடத்தி, உறுதிமொழி கொடுத்தால்தான் போராட்டத்தைக் கைவிடுவோம். இல்லையென்றால் 7-ம் தேதி மாவட்ட ஆட்சியரிடமே எங்களுடைய வாக்காளர் அட்டை, ஆதர் அட்டை, குடும்ப அட்டைகளை ஓப்படைப்பக்க போகிறோம் என்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.  
கதிராமங்கலத்தில் எப்போது இயல்பு வாழ்க்கை திரும்புமோ...!

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close