Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மோடி இஸ்ரேலுக்கு அளித்த செப்புத் தகடுகளில் தமிழ் மொழி!

மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றிருக்கிறார். இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் என்னும் பெருமையை மோடி பெற்றுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ விமான நிலையத்துக்கு நேரடியாகச் சென்று மோடியை வரவேற்றார். 

வட்டெழுத்து

 

இந்நிலையில் இந்தியாவுடன் யூத வர்த்தக சரித்திரத்தைப் பற்றிய மிகப் பழமையான ஆவணங்களின் மாதிரிகளை மோடி இஸ்ரேல் பிரதமரிடம் வழங்கினார். அந்த ஆவணங்கள் இத்தனை ஆண்டு காலமாக கேரளாவில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. ஆவணங்கள் என்றால் பேப்பரில் எழுதப்பட்ட ஆவணங்கள் அல்ல. செப்புத் தகடுகளில் தகவல்களை அச்சிட்டு வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஆவணங்களுக்கும் தமிழுக்கும் ஒரு தொடர்பு உண்டு. 

செப்புத் தகடுகளால் ஆன இந்த ஆவணங்களில் வட்டெழுத்தில் எழுதப்பட்டுள்ளன. ’வட்டெழுத்து’ என்பது கி.பி 3-ம் நூற்றாண்டில் தமிழை எழுதிப் பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறை. வட்டெழுத்தைப் பல்லவ எழுத்துமுறை என்றும் கூறுவார்கள். வட்டெழுத்துகள் வாயிலாக யூதர்கள் இந்தியாவில் வர்த்தகம் செய்ததைக் குறித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள். இந்த ஆவணங்கள் குறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள மோடி, வட்டெழுத்து (தமிழ்மொழி) பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close