Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பேச்சிப்பாறை நீரை உடனே திறக்க வேண்டும்': வலுக்கும் கோரிக்கை!

குமரிமாவட்டம் தென்மேற்கு, வடக்கு கிழக்கு பருவமழையைத் தொடர்ந்து பெற்று வந்தது. இதனால் மாவட்டத்தில் விவசாயமும் செழித்து வந்தது.கடந்த ஆண்டு முதல் பருவமழை குமரியில் பெய்யாமல் ஏமாற்றி வருகிறது. மக்கள் குடிநீருக்காகவும் விவசாயிகள் பாசனத்துக்காகவும் நீர் இல்லாமல் தவித்து வந்தனர். மழை பெய்யாததால் குமரியின் முக்கிய அணைகளான பெருஞ்சாணி, சிற்றாறு, பேச்சிப்பாறை போன்றவற்றின் நீர்மட்டம் மிகக் குறைந்து காணப்பட்டது. தற்போது குமரிமாவட்ட மலையோர கிராம பகுதிகளில் மழை பெய்ததைத் தொடர்ந்து அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது. வழக்காகமாகக் கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் 1-ம் தேதி அல்லது முதல் வாரத்தில் திறக்கப்படும். கடந்த மாதம் அணையில் போதுமான அளவு இல்லாததால் அணை நீர் திறக்கப்பட வில்லை.

இந்த நிலையில் ஜூன் மாதம் இறுதியில் பெய்த பரவலாகப் பருவமழை பெய்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது. தற்போது குமரி மலையோர பகுதிகளில் சாரல் மழையும் பெய்கிறது. இதனால் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடியில் தீவிரம் காட்டினார்கள். ஆயிரக்கணக்கான ஏக்கர் கன்னிப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் மழையின் அளவு குறைந்துவிட்டாலும் அணைகளின் நீர்மட்டம் கணிசமான அளவு இருக்கிறது. அணை திறக்கப்படாததால் கன்னிப்பூ சாகுபடி பயிர்களைக் காப்பாற முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.இதற்கு ஜூன் மாதம் திறக்கப்பட வேண்டிய பேச்சிப்பாறை அணை திறக்கப்படாததே காரணம். இதுகுறித்து விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திலும் குமரிமாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், இன்னும் பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்படவில்லை.

 

விவசாய பாசனத்துக்காக பேச்சிப்பாறை அணையை உடனடியாகத் திறக்க கோரி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் போராட்டத்தை அறிவித்துள்ளது. அதன் தலைவர் வை.தினகரனிடம் பேசினோம். ''ஆண்டுதோறும் குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ பயிர் சாகுபடிக்காக ஜூன் மாதம் 1-ம் தேதி பேச்சிப்பாறை அணையைத் திறந்து தண்ணீர் விடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு ஜூலை மாதமாகியும் அணை இன்னும் திறக்கபடவில்லை. ஜூலை மாதத் தொடக்கத்துக்குள் நெல்சாகுபடி சுமார் 5,000 ஹெக்டேர் நடந்திருக்கும்,

 

நேற்று வரை சுமார் 323 ஹெக்டேர் பரப்பளவில்தான் நெல்விவசாயம் செய்யப்பட்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் குமரிமாவட்டத்தில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை அதிகரிக்கும். உடனடியாகப் பாசனத்துக்கு பேச்சிப்பாறை அணையைத் திறக்க வலியுறுத்தி தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் வரும் 7-ம் தேதி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அதன் பின்பும் பேச்சிப்பாறை அணையை அரசு திறக்காவிட்டால் நாங்கள் விவசாயிகளை ஒன்று திரட்டி அணையை பாசனத்துக்காகத் திறப்போம்’’ என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close