Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வந்துவிட்டது... புதிய ஹூண்டாய் வெர்னாவின் டீசர்!

 

ஹூண்டாய் வெர்னா

 

மிட் சைஸ் செடான் செக்மென்ட்டின் மார்க்கெட் லீடர்களான ஹோண்டா சிட்டி & மாருதி சுஸூகி சியாஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக, தற்போது இறுதிகட்ட டெஸ்ட்டிங்கில் இருக்கும் புதிய வெர்னாவை, விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹூண்டாய். ரஷ்யா - கனடா - சீனா ஆகிய நாடுகளில், Solaris, Accent, Verna போன்ற பல பெயர்களில், கடந்தாண்டு இறுதிமுதல் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. Fuidic Sculpture 2.0 டிசைன் கோட்பாடுகளுக்கு ஏற்ப இந்தப் புதிய மிட்சைஸ் செடான் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், பார்க்க மினி எலான்ட்ரா போல கவர்கிறது புதிய வெர்னா! காரின் அளவுகளில் மாற்றம் இருப்பதால், முன்பைவிட அதிக இடவசதியை எதிர்பார்க்கலாம்; புதிய வெர்னாவின் கேபினிலும், எலான்ட்ராவின் தாக்கம் அதிகமாகத் தெரிகிறது;

 

hyundai verna

 

தற்போது விற்பனை செய்யப்படும் காரில் இருக்கும் அதே 1.4 லிட்டர் & 1.6 லிட்டர் பெட்ரோல்/டீசல் இன்ஜின் - கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன; ஹைப்ரிட் கார்களின் மீதான ஜிஎஸ்டி வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், Mild ஹைபிரிட் சிஸ்டத்தைக் காரில் சேர்ப்பது குறித்து ஹூண்டாய் என்ன முடிவெடுக்கும் எனத் தெரியவில்லை. வெர்னாவின் ஸ்டீயரிங் மற்றும் சஸ்பென்ஷனும், சிறப்பான ஓட்டுதலுக்காக ரீ-டியூன் வாய்ப்புகள் அதிகம்! ஆகஸ்ட் 22, 2017 அன்று களமிறங்க உள்ள புதிய வெர்னாவின் டீசர்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதில் அந்தக் காரின் க்ரில், ஹெட்லைட், டேஷ்போர்டு ஆகியவற்றின் வடிவமைப்பு தெரிகின்றன. 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close