Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான அறிவிப்பு ரத்து- சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஜூன் 16-ம் தேதி வெளியிட்டு விண்ணப்பங்களைப் பெற்று வந்தது. விண்ணப்பிக்க கடைசிநாள் 07.07.2017 என்றும், எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 13-ம் தேதி நடைபெறும் என்றும் அறிவித்திருந்தது ஆசிரியர் தேர்வு வாரியம். இந்த அறிவிப்பில் பொறியியல் பாடங்களுக்கான விரிவுரையாளர் பணிக்குப் பொறியியல் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், பொறியியல் அல்லாத பிரிவுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. 

பாலிடெக்னிக்

இந்நிலையில், சேலத்தைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மனுவில் 'பாலிடெக்னிக் பணியிடங்களை நிரப்ப பி.இ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நான் பி.இ. படிப்பில் இரண்டாம் வகுப்பிலும், முதுநிலை பொறியியல் படிப்பில் முதல் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்கிறேன். ஆனால், என்னுடைய விண்ணப்பம் ஏற்கப்படவில்லை. இது அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் விதிகளுக்கு எதிராக உள்ளது. எனவே, விரிவுரையாளர் தேர்வுக்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்' என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பாலிடெக்னிக் உயர்நீதிமன்றம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு அரசு வெளியிட்டு இருந்த அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட்டார். மேலும், 'அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் விதிகளைப் பின்பற்றி புதிய அரசாணை வெளியிட்டு அதனடிப்படையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை நடத்திட வேண்டும்' என்றும் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

இந்தத் தீர்ப்பை அடுத்து, ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் புதிய அறிவிப்பாணையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close