Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி ரூ.20 கோடி அபராதம்! தமிழக மீனவர்களை மிரளவைக்கும் இலங்கை

தமிழக மீனவர்களுக்கு ரூ. 20 கோடி அபராதம் விதிக்கும் மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடற்தொழில் சட்டத்தில் இலங்கை அரசு திருத்தம் கொண்டுவரும்  மசோதாவை இன்று தாக்கல் செய்துள்ளது. தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல், எல்லை தாண்டி மீன் பிடித்தல் போன்ற செயல்களுக்கு ரூபாய் 2 கோடி முதல் 20 கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இலங்கை அரசின் இந்த நடவடிக்கை தமிழக மீனவர்களை அச்சமடையவைத்துள்ளது.

 

ஏற்கனவே தமிழக மீனவர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.  எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விரட்டி அடிப்பது, கைது செய்வது, அவர்களின் வலைகளை சேதபடுத்துவது என பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தற்போது இலங்கை அரசின் இந்த புதிய சட்ட திருத்தத்தால் கைது செய்யப்படும் மீனவர்கள் அதிக அளவில் அபராதமாக கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இது முற்றிலும் தமிழக மீனவர்களுக்கு எதிரான சட்ட மசோதாவாக உள்ளது. 

 

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close