Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி ரிபப்ளிக் டிவியில் 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' - வெற்றிகண்ட அர்னாப்!

'நேஷன் வான்ட்ஸ் டு நோ' என்ற வரி செய்தித் தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலம். அர்னாப் கோஸ்வாமி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியராக இருந்தபோது நியூஸ் ஹவர் நிகழ்ச்சியில் அவர் பயன்படுத்தியது. பின்னர் அவர், டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிலிருந்து வெளியேறி ரிபப்ளிக் என்ற சொந்தத் தொலைக்காட்சி சேனலைத் தொடங்கினார். 

அர்னாப்

இந்த 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' வரியை ஜனவரி 9, 2013 முதல் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்பட்டு வந்திருப்பதால் அதை ரிபப்ளிக் டிவியில் பயன்படுத்தக் கூடாது என்றும், பயன்படுத்தினால் சிறைக்கு அனுப்புவோம் என்றும் அர்னாப் கோஸ்வாமிக்கு டைம்ஸ் நவ் நிர்வாகம் மிரட்டல் விடுத்ததாக அர்னாப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குச் சென்றது. 

இந்நிலையில், இந்த வழக்கில் தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரு முன்னணி தொலைக்காட்சி சேனல்களின் நிர்வாகம் இப்படி அடித்துக்கொள்வது தங்களுக்கும் இந்தத் துறைக்கும் நல்லதல்ல. எனவே, சுமுகமாகச் செல்லுங்கள். இருவருமே இதைப் பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது.

இனி ரிபப்ளிக் டிவி சேனனில் 'நேஷன் வான்ட்ஸ் டு நோ' வுடன் அர்னாப் இஸ் பேக்! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close