Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மு.க.ஸ்டாலினிடம் நேரில் நலம் விசாரித்தார் முதல்வர் பழனிசாமி!

கண்புரை அறுவைசிகிச்சை செய்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர்.

தமிழக சட்டப்பேரவைக்கு தினந்தோறும் வருகை தந்த தி.மு.க. செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்று விசாரித்தபோது, கண்புரை அறுவைசிகிச்சை செய்துகொள்வதற்காக மு.க.ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது. ஒரு கண்ணில் கண்புரை அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் வீடு திரும்பினார்.

stalin

இந்நிலையில், மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பின்னர், இன்று சட்டப்பேரவைக்கு மு.க.ஸ்டாலின் வருகைதந்தார். அவரிடம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் நலம் விசாரித்தனர். அவர்களுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

முன்னதாக, உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சபாநாயகர் தனபால் சிகிச்சைபெற்றுவந்தார். நேற்று வீடு திரும்பிய சபாநாயகர் தனபால், இன்று சட்டப்பேரவைக்கு வந்தார். அவரிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். பதிலுக்கு, சபாநாயகர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close