Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தமிழகத்தில் இன்று இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனத்தின் காரணமாக, இன்று தமிழகத்தில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

தமிழகத்தின் பல இடங்களில், வெப்பச்சலனத்தின் காரணமாக மழை தொடர்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிக்கு அருகே உள்ள மாவட்டங்களில், பருவமழை தொடர்ச்சியாகப் பெய்துவருகிறது. வெப்பச்சலனத்தின் காரணமாகவே, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை ஓரிரு இடங்களில் பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தில் மழை குறைந்து காணப்பட்டாலும், தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை, மாலை நேரங்களில் வானம் மேகமூட்டமாகவே காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தைக் கடந்த தென்மேற்குப் பருவமழை, தற்போது வட இந்தியாவில் பலமாகப் பெய்துவருகிறது. சமீபத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடுமையாக மழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close