Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செல்ஃபி ஸ்டிக்குக்குத் தடா! ஏன் தெரியுமா?

இந்திய அருங்காட்சியகங்களுக்கும் பார்வையாளர்கள் இனி செல்ஃபி ஸ்டிக்குகளை எடுத்துச் செல்ல முடியாது

Selfie Stick

செல்லும் இடங்களில் எல்லாம் செல்ஃபிகளாக அள்ளி வரும் மோகம் நம் மக்களிடம் நாளுக்கு நாள் சிகரம் தொட்டு வருகிறது. செல்போனை செல்ஃபி ஸ்டிக்கில் இணைத்து மிகப்பெரிய குழுக்களைக்கூட க்ளிக் செய்து அதிர வைக்கின்றனர். இயற்கையின் பின்னணியில் தன்னை ரசிப்பதில் அப்படியோர் அலாதிப்பிரியம். இந்தியத் தொல்லியல் துறை இவர்களின் கைகளைக் கட்டிப்போட்டுள்ளது. இந்திய அருங்காட்சியகங்களுக்கும் பார்வையாளர்கள் இனி செல்ஃபி ஸ்டிக்குகளை எடுத்துச் செல்ல முடியாது. இதற்கு இந்தியத் தொல்லியல் துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. 

மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தாஜ் அருங்காட்சியகம் (ஆக்ரா),  இந்தியப் போர் நினைவு அருங்காட்சியகம் (டெல்லி), கொனார்க், ஹம்பி உள்ளிட்ட, 46 அருங்காட்சியகங்களுக்கு இந்தத் தடை பொருந்துமாம். இதுபற்றி தொல்லியல் துறை அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? 

அருங்காட்சியகங்களில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டெடுக்கப்பட்ட பண்டைய கால சின்னஞ்சிறு கலைப்பொருள்கள் பெரும் அளவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. இவை பாரம்பர்யத்தை வெளிப்படுத்துபவை. விலை மதிப்பு மிக்கவை. இதுபோன்ற கலைப்பொருள்களின் அருகில் நின்று செல்ஃபி ஸ்டிக்குகளைப் பொருத்தி படம் எடுக்கும்போது அந்தப் பொருள்கள் சேதம் அடைய வாய்ப்புள்ளது. இதனால் நாடு முழுவதும் அனைத்து அருங்காட்சியகங்களிலும் கலைப்பொருள்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறை அருங்காட்சியக கொள்கையின்படி செல்ஃபி ஸ்டிக்குகளை அருங்காட்சியக வளாகங்களுக்குள் எடுத்துச் செல்ல முற்றிலும் அனுமதி கிடையாது என்கின்றனர்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close