Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் தற்கொலை! 

டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் திலீப் பெண்ட்சே (Dilip Pendse), மும்பையிலுள்ள அவரது அலுவலகத்தில் தற்கொலை செய்துகொண்டார். 

Dilip Pendse

கடந்த 2001-ம் ஆண்டு, பெண்ட்சே இரண்டு கோடி ரூபாய் மோசடி செய்ததுக்காக, டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மேலும், அவர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதன்பிறகு, அவர் மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தை நடத்திவந்திருக்கிறார். இதற்கிடையே, புதன்கிழமையன்று அவர் தனது நிறுவனத்தின் முதல் தளத்தில்  தற்கொலை செய்துகொண்டார் என மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், தான் சொந்த காரணங்களுக்காகவே தற்கொலை செய்துகொண்டதாக அவர் கடிதம் எழுதியுள்ளார். 

இதற்குமுன், கடந்த 2013-ம் ஆண்டு, டாடா ஸ்டீல் நிறுவனத்தின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் சாரு தேஷ்பாண்டேயும், கடந்த 2014-ம் ஆண்டு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கார்ல் ஸ்லேமும் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close