Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அல்வா கொடுக்கும் மத்திய, மாநில அரசுகள்... நெடுவாசலில் நூதனப் போராட்டம்!

நெடுவாசலில் மத்திய, மாநில அரசுகள் கிராம மக்களுக்கு அல்வா கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Distributing Halwa protest in Neduvasal

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து அக்கிராம மக்கள் போராட்டத்தில் இறங்கினர். மத்திய அமைச்சரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தனியார் நிறுவனங்களுடன் கையெழுத்தானதையடுத்து, அங்கு மீண்டும் போராட்டம் தொடங்கியது.

இந்நிலையில், இன்று நெடுவாசல் மக்கள் அல்வா கொடுக்கும் வினோதமான போராட்டத்தை முன்னெடுத்தனர். மாவட்ட நிர்வாகம், மத்திய அரசு, மாநில அரசு உள்ளிட்ட பதாகைகளை ஏந்திவர்கள், கிராம மக்களுக்கு அல்வா கொடுத்து தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர். 86-வது நாளாக நெடுவாசலில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஒப்பாரி வைப்பது, அரசின் வாக்குறுதியை தண்ணீரில் எழுதுவது என நூதன போராட்டங்களில் நெடுவாசல் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் ரத்துப் செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close