Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா மீண்டும் வழக்கு!

தமிழகத்தில் இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டில், மிருகவதை நடந்ததாக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

peta


விலங்குகள் நல அமைப்புகளின் முயற்சியால் காளைகள், காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் இரண்டு ஆண்டுகள் ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெறவில்லை. அதன் பிறகு, இந்தாண்டு இளைஞர்கள் மற்றும் மக்களின் இடைவிடாத போராட்டத்தால் தமிழக சட்டசபையில் இதுதொடர்பாகச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் காரணமாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடந்தது.

தற்போது, பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் 2017-ல் நடந்த ஜல்லிக்கட்டில் மிருகவதை நடந்துள்ளதாக ஆதாரத்தோடு மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் மிருகவதைத் திருத்த சட்டத்தை ரத்து செய்யவும் பீட்டா கோரிக்கை விடுத்துள்ளது. 

இதனால், தற்போது தமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு புதிய சிக்கல் உருவாகிவுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close