Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்எல்ஏ-க்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

புதுச்சேரி நியமன எம்எல்ஏ-க்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி- ஆளுநர் கிரண்பேடி இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, கடந்த 3-ம் தேதி, ஆளுநர் கிரண்பேடி நியமன எம்எல்ஏ-க்களாக 3 பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனால், புதுச்சேரி அரசியல் வட்டாரம் பரபரப்பானது. மேலும், இதுகுறித்து பேசிய முதல்வர் நாராயணசாமி, 'கிரண்பேடி ஜனநாயகப் படுகொலை செய்து வருகிறார்' என்று காரமாக விமர்சனம் செய்தார். 

ஜி.ராமகிருஷ்ணன்

இந்நிலையில், புதுச்சேரி நியமன எம்எல்ஏ-க்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அந்த மாநிலத்தின் நியமன எம்.எல்.ஏ பதவிகளுக்கு பா.ஜ.க-வினர் பெயர்களைப் பரிந்துரை செய்திருப்பதுடன், அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்துள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குவதாக அமைந்திருக்கிறது.

ஊழல் எதிர்ப்பாளராகவும் லோக்பாலுக்காகப் போராடுபவராகவும் தன்னை காட்டிக்கொண்ட புதுச்சேரி ஆளுநர், மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாகச் செயல்படுகிறார் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. ஆளுநரை தங்கள் அரசியல் நோக்கத்துக்காக மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்தி வருகிறது என்பதும் அம்பலமாகியுள்ளது.

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள்

எம்.எல்.ஏ-க்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், துணை நிலை ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தி புதுச்சேரியில் இடதுசாரி, ஜனநாயகக் கட்சிகள் 8.7.2017 அன்று முழு அடைப்புக்கு அறைகூவல் விடுத்துள்ளன. புதுச்சேரியில் நடைபெறவுள்ள முழு அடைப்புப் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆதரவு தெரிவிப்பதோடு, எம்.எல்.ஏ-க்கள் நியமனத்தை ரத்து செய்வதோடு, எதேச்சதிகாரமாகச் செயல்படும் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்துகிறது' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close