Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காரைக்காலில் மாங்கனித் திருவிழா 8-ம் தேதி நடைபெறுகிறது

காரைக்கால் நகரில் வீற்றிருக்கும் காரைக்கால் அம்மையார் கோயிலில் புகழ்பெற்ற மாங்கனித் திருவிழா வருகிற 8-ம் தேதி நடக்கிறது. 

 

காரைக்காலில் பிறந்து பரமதத்தரை மணந்துகொண்ட புனிதவதி, சிவனருளால் ஆட்கொள்ளப்பட்டார். கணவர் கொடுத்தனுப்பிய மாம்பழத்தை சிவனடியாருக்கு படைத்துவிட்ட புனிதவதியார், மீண்டும் கணவர் கேட்டதும் சிவனை வேண்டி மீண்டும் மாங்கனி பெற்றார். இந்த திருவிளையாடல்தான் புனிதவதியை காரைக்கால் அம்மையாக மாற்றியது. தெய்வப்பெண் இவர் என்று கணவர் விலகியதும், பேயுரு கொண்டு கயிலை வரை சென்று ஈசனை தரிசித்தார்.  63 நாயன்மார்களில் தனிச்சிறப்பு கொண்ட தாயாக தனிக்கோவில் கொண்டு காரைக்காலில் அருள் செய்கிறார் காரைக்கால் அம்மையார். இதனால்தான் எல்லா கோவிலிலும் 63 நாயன்மார்களில் இவர் மட்டுமே அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள், அற்புதத் திருவந்தாதி போன்ற பதிகங்களை பாடிய அம்மையாரின் பெருமைகளை எல்லோருக்கும் தெரிவிக்க காரைக்கால் அருள்மிகு சோமநாதர் திருக்கோயிலின்  சார்பில் ஒவ்வோராண்டும் திருவிழா நடைபெறுகிறது. 

மாங்கனித் திருவிழா

வரும் 8-ம் தேதி சனிக்கிழமை அதிகாலை ஈசனின் திருவீதி உலா நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற மாடிகளில் நின்று ஈசனின் மீது மாங்கனிகளை இறைத்து வழிபாடு செய்வார்கள். காரைக்கால் அம்மையின் பெருமை சொல்லும் இந்த திருநாளில் ஈசனை தரிசித்து அருள் பெறுவோம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close