Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தலாய்லாமாவின் 82-வது பிறந்தநாள் கொண்டாட்டம்!

20-ம் நூற்றாண்டின் சிறந்த ஒருவராகத் திகழ்ந்த தலாய்லாமாவின் 82-வது பிறந்தநாளையொட்டி திபெத்தில் உள்ள 'லெவின்' பகுதியில் திபெத்தியர்கள் பாரம்பர்ய ஆடைகள் அணிந்து அவரது பிறந்தநாளைக் கொண்டாடினர்.  மேலும், அவர் நீண்ட நாள் வாழவும் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.  இந்த விழாவில் திபெத்திய பிரதமர்  லோப்சங் சங்கேயும் கலந்துகொண்டார். 

தலாய்லாமாவின் 82-வது பிறந்தநாள்

1959-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி திபெத்திய உயரதிகாரிகள், "தலாய்லாமா... திபெத்தை விட்டு வெளியேறுங்கள், உங்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து. நீங்க வெளியிலிருந்து உரிமைக்காக போராடுங்கள். உலக நாடுகளுக்கு திபெத்தின் நிலையை தெரிவிப்பதற்கு இது ஒன்றுதான் வழி" என்று அறிவுரை கூற லாமாவும் அதற்கு ஒப்புக்கொண்டு திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவுக்கு தஞ்சம் புகுந்தார். 1989-ம் ஆண்டு தலாய்லாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் தொடர்ந்து சீனாவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறார்.

திபெத்தில் உள்ள 'டக்செர்' குக்கிராமத்தில் 1935-ம் ஆண்டு ஜூலை 6-ம் நாளன்று பிறந்த இவரின் முக்கியமான நெறிமுறைகளான, அகிம்சை, சமாதானம், மத நல்லிணக்கம் ஆகியவை இன்றளவும் அனைவராலும் போற்றப்பட்டுவருகிறது. மேலும், 20-ம் நூற்றாண்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராகத் தலாய்லாமா திகழ்கிறார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close