Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தீர்க்க முடியாத வழக்குகளா? பொதுமக்களை அழைக்கும் நீதிபதிகள்!

 

ஜெயங்கொண்டத்தில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள, மக்கள் நீதிமன்றத்தில்  தீர்க்கமுடியாத வழக்குகள் தீர்த்து வைக்கப்படும் என்று அழைப்பு விடுத்துள்ள நீதிபதிகள், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள மக்கள் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, தீர்க்க முடியாத வழக்குகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளக் கூடிய வழக்குகளுக்கு தீர்வுகாண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்களது சட்டபிரச்னைகளுக்கு தீர்வு காணவும், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளையும், தங்களுடைய வழக்கறிஞர்களுடன் வந்து தீர்வுகாண பணிகள்குழு கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும், இந்த வழக்குகள் குறித்து சமாதான பேச்சுவார்த்தை தினந்தோறும் நடைபெற்று வருகிறது. மக்கள் நீதிமன்றத்தில் முடிவுறும் வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை. மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவரங்கள் தொடர்பான விழிப்பு உணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் நீதிபதிகள் விநியோகம் செய்தனர். ஜெயங்கொண்டம் பேருந்துநிலையம் கடைவீதி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் சார்பு நீதிபதி சரண், சிறப்பு சார்பு நீதிபதி புஷ்பராணி, மாவட்ட உரிமையியல் நீதிபதியும் சட்டப்பணிகள் குழுத் தலைவருமான பாரதிராஜா, மாஜிஸ்திரேட் மதிவாணன் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.

வழக்கறிஞர் ஜெயக்குமாரிடம் பேசியபோது, "நீதிபதிகள் எடுத்து வரும் முயற்சிகள் அபரிமிதமானது. அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இரண்டு ஊர்களில் மட்டும் 9,939 வழக்குகள் நிலுவையில் உள்ளன. உரிமையில், குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளும் அடக்கம். இதன் நோக்கமே இரு தரப்பினரும் சமரசமாக பேசி ஒத்துக்கொண்டால் வழக்குகள் எளிதில் முடித்து வைக்கப்படும். இதனால், வழக்குகள் எண்ணிக்கை குறைவதோடு, நீதித் துறையின் நேரம் மிச்சப்படுகிறது. சம்மந்தப்பட்ட நபர்கள் பண விரயங்கள் தவிர்க்கப்படும். மக்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நீதிக்காக காத்திருக்கவேண்டிய நிலை வராது. வழக்குகளை நடத்தமுடியாமல் மிகவும் சிரமப்படும் மக்கள், மக்கள் நீதிமன்றத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்" என்று முடித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close