Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் பலமாக தடம் பதிக்கும் அமேசான் நிறுவனம்!

அமேசான் நிறுவனம்

ந்தியாவில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான், தனது வர்த்தகத்தை இன்னும் பலமாக விரிவுபடுத்த இருக்கிறது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தை பலப்படுத்திவருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் ரூ.1680 கோடியை முதலீடு செய்துள்ளது. அத்துடன் இந்த ஆண்டில் மட்டும் இந்தியாவில் ரு.32,295 கோடியை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக அமேசான் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,  " இ-காமர்ஸ் வர்த்தகத்தில் இந்தியா மீது நல்ல நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அந்த நம்பிக்கையை இன்னும் வலுப்படுத்த இந்த ஆண்டு கூடுதலாக இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறோம். இதற்காக எங்கள் தயாரிப்புப் பொருள்களையும் அதிகப்படுத்த இருக்கிறோம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close