Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையில் அலுவல் வாடகை 6% அதிகரிப்பு! 

2017 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் சென்னைக் குடியிருப்பு மற்றும் அலுவலகச் சந்தை தொடர்பான விரிவான ஆய்வு ஒன்றை நடத்தி நைட் ஃப்ராங் இந்தியா வெளியிட்டுள்ளது

சென்னை,

இந்த ஆய்வு முடிவில், "சென்னையில் தேவையான அலுவலக இடத் தட்டுப்பாடு இன்னும் தொடர்கிறது. புதிதாக நிறைவடைந்துள்ள அலுவலகங்கள் மூன்று மடங்கு அதிகரித்தாலும் சந்தையின் தேவைகளுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப இயலச் சேவைகள் சென்னை அலுவலக இடச் சந்தையில் அதிக அளவு நுகர்வுப் பிரிவாகத் தொடர்கிறது. 2017-ம் முதலாம் அரையாண்டில் சென்னையில் மற்ற இடங்களைவிட ஓஎம்ஆர் பகுதி அதிகம் ஈர்த்தது. 2017 முதல் அரையாண்டில் சென்னையில் அலுவல் வாடகை 6 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. இதுவே சென்னையின் ஓஎம்ஆர் பகுதிகளில் அதிகபட்சமாக வாடகை 8 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. சென்னையில் புதிய குடியிருப்பு விற்பனை மற்றும் அறிமுகம் 2017-ன் ஆரம்பத்தில் சுமாராகவே உள்ளது. அனைவருக்கும் ஏற்கத்தக்க வகையில் ரூ.50 லட்சத்துக்கும் குறைந்த விலையில் உள்ள புதிய குடியிருப்புகள் அதிகம் அறிமுகப்பட்டுள்ளன. 2016-ன் முதல் அரையாண்டில் 39 சதவிகிதமாக இருந்த ரூ.50 லட்சத்துக்கும் கீழ் அறிமுகமான குடியிருப்புகள், 2017-ல் 69% ஆக அதிகரித்துள்ளது" என்று நைட் ஃப்ராங் இந்தியா, சென்னை இயக்குநர் காஞ்சனா கிருஷ்ணன் கூறியுள்ளார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close