Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்செக்ஸ்... புதிய உச்சத்தைத் தொட்டது!

மும்பை பங்குச் சந்தை இன்று 123 புள்ளிகள் உயர்ந்து,  31,369 புள்ளிகளை எட்டி புதிய உச்சத்தைத் தொட்டது. கடந்த முறை தொட்ட உச்சத்தைவிட தற்போது சென்செக்ஸ் 31 புள்ளிகளை அதிகமாக எட்டியிருக்கிறது சென்செக்ஸ்.

ஆனால், தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டி இன்று 36 புள்ளிகள் உயர்ந்து, 9674 புள்ளிகளை அடைந்திருக்கிறது. இது கடந்த முறை அடைந்த உச்சத்தைவிட ஒரே ஒரு புள்ளி குறைவாகும்.

இந்த ஆண்டில் வழக்கத்தைவிட 5% அதிகமான மழை பெய்யும் என அரசுத் தரப்பிலிருந்து வெளியான தகவல் முதலீட்டாளர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தியதால் சந்தையில் அதிக அளவு வந்திருப்பதாக சந்தை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். 

நிஃப்டி ஐ.டி, பி.எஸ்.இ. கன்ஸ்ட்ரக்‌ஷன், பி.எஸ்.இ. ஆயில் அண்ட் கேஸ் ஆகிய துறைகளைத் தவிர மற்ற துறைகள் அனைத்துமே இன்று முன்னேற்றம் கண்டது குறிப்பிடத்தக்கது. 

தவிர, உலக அளவில் இன்றைக்கு பெரும்பாலான சந்தை இறக்கத்திலேயே வர்த்தகம் ஆயின. இந்தியப் பங்குச் சந்தைகளும் இன்று இறக்கத்திலேயே வர்த்தகம் ஆகும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால்,  இந்தியச் சந்தைகள் மட்டும் ஏற்றத்தில் வர்த்தகமாகி, எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close