Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டத்திருத்தம்!

மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

Law revised in Srilanka over Fishermen

இலங்கைக் கடற்பரப்பில் மீனவர்களின் பிரச்னை நீண்ட காலமாகவே நீடித்து வருகிறது. குறிப்பாக எல்லை தாண்டிய குற்றத்துக்காக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் தமிழக மீனவர் பிரிட்ஜோ இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதையடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் தொடராது என இலங்கைத் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி இலங்கைக் கடற்படையில் மீன் பிடித்தால், 2 கோடி ரூபாயில் இருந்து 20 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட மீன் வலைகளைப் பயன்படுத்தினால் ரூபாய் 50,000 விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று இலங்கை சென்ற தமிழிசை சவுந்தர்ராஜன், 'தமிழக மீனவர்களின் பிரச்னைக்குத் தீர்வு காணப்படும்' என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close