Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காணாமல் போன சிறுவன் கடலில் மிதந்தான்!

 

 

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் சுனிகர். இவர்  குமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை கடற்கரை கிராமத்துக்கு கடந்த 3-ம் தேதி தனது மனைவி மற்றும் 2 வயது மகன் சகாயசான்சோவுடன்  திருமணத்துக்காக வந்திருந்தார். திருமண வீட்டில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, சகாயசான்சோ திருமண வீட்டின் முன்பாக விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, சிறுவன் திடீரென காணாமல் போனான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோரும், மீனவ கிராம மக்களும் சிறுவனை பல இடங்களில் தேடினார்கள். ஆனால், எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. உடனே இதுகுறித்து புதுக்கடை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். 

குமரி மாவட்டத்தில் தொடர்ச்சியாக குழந்தைகள் கடத்தப்பட்டு வருவதால், புதுக்கடை போலீஸாரும் சிறுவன் கடத்தப்பட்டுவிட்டானா? என்கிற கோணத்தில் விசாரணையை தொடர்ந்தனர். இந்நிலையில், இன்று  சிறுவன் குமரிமாவட்டம் முட்டம் கடல் பகுதியில் பிணமாக மிதந்ததை, கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் குளச்சல் கடலோர காவல் படைக்கு தகவல் கொடுத்தனர்.

கடலுக்கு தனிப்படகில் போலீஸார் சென்று சிறுவனின் உடலை கரைக்கு கொண்டுவந்தனர். சிறுவனை பறிகொடுத்த சுனிகர் குடும்பத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் முட்டம் வந்து கடலில் இறந்து மிதந்தது தனது மகன் சகாயசான்சோதான் என உறுதி செய்தனர். இறந்த சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுவன் சகாயசான்சோ இறந்தது மர்மமாகவே நீடிக்கிறது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close