Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நீட் தேர்வு குறித்த போராட்டத்தில் தி.மு.க-வினர் பங்கேற்க வேண்டும் : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

'நீட் தேர்வுகுறித்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஜூலை 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் தி.மு.க-வினர் திரளாகப் பங்கேற்க வேண்டும்' என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில், கடுமையான எதிர்ப்பையும் மீறி இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது. பல்வேறு குளறுபடிகளுக்கும் சர்ச்சைகளுக்கும் மத்தியில், நீட் தேர்வு நடந்து முடிந்தது. இதற்கிடையில், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் வகையில், சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த மசோதா, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்படாமலே இருந்துவருகிறது.

இந்த நிலையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஜூலை 12-ம் தேதி ஜனநாயக பாதுகாப்புப் பேரவை சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக கீ.வீரமணி அறிவித்திருந்தார். இதுகுறித்து  மு.க.ஸ்டாலின், 'இந்தப் போராட்டத்தில் தி.மு.க-வினர் திரளாகப் பங்கேற்க வேண்டும். ஒரு கோடி அஞ்சலட்டைகள் மற்றும் மின்னஞ்சல்கள் அனுப்பும் பணியிலும் ஈடுபட வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close