Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உணவுப் பொட்டலப் பொருள்களின்மீது திருத்தப்பட்ட ஸ்டிக்கர்!' தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு

உணவுப் பொட்டலப் பொருள்களின்மீது திருத்தப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''ஜி.எஸ்.டி-யினால் உணவுப் பொட்டலப் பொருள்களின் சில்லரை விற்பனை விலை (எம்.ஆர்.பி.) திருத்தப்படலாம். இந்நிலையில், 2011-ம் ஆண்டு சட்டமுறை எடையளவு விதிகளின்படி, கடந்த 1-ம் தேதிக்கு முன்பு தயாரிக்கப்பட்டு விற்பனைசெய்யப்படாமல் இருப்பில் உள்ள பொட்டலப் பொருள்களின்மீது, ஜிஎஸ்டி வரி காரணமாகத் திருத்தப்படும் விலையை, நடைமுறையில் உள்ள சில்லரை விற்பனை விலையுடன் செப்டம்பர் 30-ம் தேதிவரை மாற்றியமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. திருத்தப்படும் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையைத் தனியாக ஸ்டிக்கர் ஒட்டியோ, முத்திரையிட்டோ, அச்சிடப்பட்டோ இருக்கலாம். அந்த ஸ்டிக்கரை, ஏற்கெனவே அச்சிடப்பட்ட விலையை மறைத்து ஒட்டக்கூடாது. இதன்மூலம், கடந்த 1-ம் தேதிக்கு முன்பு அச்சிடப்பட்டு இருப்பில் உள்ள பொருள்களின் மீதுள்ள விலையில் உரிய திருத்தம் மேற்கொண்டு, செப்டம்பர் 30-ம் தேதி வரை பயன்படுத்தலாம். பொட்டலப் பொருள்களில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கும், ஜிஎஸ்டி-யினால் மாற்றியமைக்கப்பட்ட விலைக்கும் உள்ள வித்தியாசம், அந்தப் பொருளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி-யின் வரி விகிதத்தைவிட அதிகப்படியாக இருக்கக்கூடாது. எடையளவு மற்றும் பொட்டலப் பொருள்களின் விதி மீறல்கள் மற்றும் எம்ஆர்பி விலை மீதான புகார்கள் குறித்து TNLMCTS எனும் செல்போன் ஆப் மூலம் பயனாளிகள் புகார் தெரிவித்து, உரிய நிவாரணம் பெறலாம்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close