Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாநில மொழிகளில் வங்கி விண்ணப்பங்கள்...

'வங்கிகளில், அனைத்து பரிவர்த்தனைப் படிவங்களும் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில் இருக்க வேண்டும்' என்ற ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையைத் தீவிரமாக அமல்படுத்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.

மதுரை உயர் நீதிமன்றம்

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜூ, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ''தமிழகத்தில் தேசியமயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகளின் 10 ஆயிரம் கிளைகள் செயல்பட்டுவருகின்றன. இதில், 3 ஆயிரத்துக்கும் அதிகமான வங்கிக் கிளைகள் கிராமப்புறங்களில் உள்ளன. பெரும்பான்மையான வங்கிகளில் பயன்படுத்தப்படும் பணப் பரிவர்த்தனைப் படிவங்கள், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் உள்ளன. இதனால், படிப்பறிவற்ற ஏழைகள் பணப் பரிவர்த்தனைப் படிவங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஆங்கிலம், இந்தி தெரிந்தவர்களின் உதவியை நாட வேண்டியுள்ளது.

எரிவாயுசிலிண்டருக்கான மானியத் தொகை, தற்போது வங்கிகளில் செலுத்தப்படுகிறது. பணப் பரிவர்த்தனைப் படிவங்கள் ஆங்கிலம், இந்தியில் இருப்பதால், எரிவாயு மானியத் தொகையை எடுக்க முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர். எனவே, தமிழகத்தின் அனைத்து வங்கிகளிலும் பணப் பரிவர்த்தனை தொடர்பான அனைத்துப் படிவங்களையும், ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி பொது மேலாளர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''ரிசர்வ் வங்கி 2005-ல் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கணக்கு திறப்பு படிவம், பணம் எடுக்கும் படிவம், பணம் செலுத்தும் படிவம் உள்ளிட்ட அனைத்திலும் ஆங்கிலம், இந்தி மற்றும் மாநில மொழிகளில் அச்சிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையைப் பின்பற்றக்கோரி 2014, 2015-ம் ஆண்டுகளிலும் வங்கிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அந்தச் சுற்றறிக்கை அமலில் உள்ளதா என்பது தொடர்பாக ரிசர்வ் வங்கி அடிக்கடி வங்கிகளுக்குச் சென்று ஆய்வுசெய்துவருகிறது. எனவே, மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்'' எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, 'ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை அனைத்து வங்கிகளும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இனி, மாநில மொழிகளிலும் வங்கிப் பரிவர்த்தனைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close