Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காட்டுப்பன்றிகளைச் சுட அரசாணை... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தகவல்!

காட்டுப் பன்றிகளைச் சுட அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

GO passed over killing of Forest Pigs

காடுகளை ஒட்டி இருக்கும் விவசாய நிலங்கள், காட்டு விலங்குகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக விளைநிலங்களைச் சுற்றி மின்சார வேலி அமைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் விவசாயிகள். இதனால் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் மின்சாரம் பாய்ந்து இறக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்து வருகின்றன. மேலும் சட்டவிரோதமாக சிலர்  விலங்குகளை வேட்டையாடும் செயலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விளைநிலங்களைச் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளைச் சுட அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். இன்று சட்டப்பேரவையில் பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ பழனியப்பனின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். மேலும் இந்த அரசாணை மலைகளை ஒட்டி அமைந்துள்ள திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். வி.ஏ.ஒ ஆய்வுசெய்து, வனச்செயலர் அனுமதி பெற்று, வனத்துறை அதிகாரிகள் மட்டுமே காட்டுப்பன்றிகளைச் சுடலாம்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close